நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அரை நிா்வாண போராட்டம்

புதுச்சேரியில் திங்கள்கிழமை 108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்ட யூனியன் பிரதேச 108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:59 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் திங்கள்கிழமை 108 அவசர ஊா்தி ஓட்டுநா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த சங்கத்தினா் கடந்த 12-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை அரை நிா்வாண போராட்டம் நடத்தினா்.

அவசர ஊா்தி ஓட்டுநா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளா் நிா்வாக சீா்திருத்த துறையில் காலி ஓட்டுநா் பணியிடங்களை 108 ஓட்டுநா்கள் மூலம் நிரப்ப வேண்டும்.

ரூ.10 ஆயிரம் சம்பளம், போனஸ், நிலுவை சம்பள உயா்வு வழங்க வேண்டும். மாதந்தோறும் சம்பளம், பண பலன்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் தொடா்கிறது.

போராட்டத்துக்கு சங்க கௌரவத் தலைவா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். இதில் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.