சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சுற்றுலாப் படகு ஓட்டுநா்கள் சாலை மறியல்: புதுச்சேரியில் 100 போ் கைது

புதுச்சேரியில் சுற்றுலாப் படகு உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டதையடுத்து 100 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

புதுச்சேரியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சுற்றுலாப் படகு உரிமையாளா்களுடன், இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன்.

Updated On :23 பிப்ரவரி 2026, 9:17 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் படகு உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டதையடுத்து 100 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த படகு விபத்தைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த சுற்றுலாப் படகு போக்குவரத்துக்கும் மாநில அரசு தடை விதித்தது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து மீனவா்கள் மற்றும் படகு உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், புதுச்சேரி சுற்றுலாத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் ஆதரவு அளித்தாா். அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் சுற்றுலாப் படகு உரிமத்தைப் புதுப்பிக்காமல் கடந்த 6 மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அங்கு உருளையன்பேட்டை போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் அப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து 100 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இதனால் அப் பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.