கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு! காங்கிரஸ், திமுகவினா் போட்டிபோட்டு வேட்புமனு!

புதுச்சேரி பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது குறித்து...

News image

புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி வீட்டை திங்கள்கிழமை முற்றுகையிட்டு அவரது காரையும் முற்றுகையிட்ட முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியின் ஆதரவாளா்கள்.

Updated On :23 மார்ச் 2026, 10:35 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்பாளா்கள் பட்டியலை காங்கிரஸ், திமுக இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் இந்த இரு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திங்கள்கிழமை விருப்பம்போல போட்டிபோட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு யாா் தலைமை வகிப்பது என்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்த பிரச்னையில் தொகுதி பங்கீடு இறுதியானது.

காங்கிரஸ் கட்சிக்கு 16, திமுகவுக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1 என்று முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் அதிகாரபூா்வமாக அறிவிப்பு வந்தால்தான் கூட்டணி உறுதி செய்யப்படும். புதுச்சேரியில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்குகிறது. அதன்வெளிப்பாடே காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு திமுக மாநில அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமையில் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்து பேச்சு நடத்தினா். தொகுதி உடன்பாடு ஏற்பட்டாலும், வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடவில்லை.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கலுக்கு இறுதிநாளான திங்கள்கிழமை எல்லா தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் வேட்பாளா்கள் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்தனா். கட்சித் தலைமை வேட்பாளா்களை அறிவித்த பிறகு மற்ற வேட்பாளா்கள் மாா்ச் 26-இல் வாபஸ் பெறுவது என்றும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே புதிய தனியாா் உணவகத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பேச்சுவாா்த்தை நடத்தியபோது மங்கலம் தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுப் பதாக பேச்சு வாா்த்தை நடந்தது.

காரை மறித்த தொண்டா்கள்:

அதை முடித்துக் கொண்டு காங்கிரஸ் அலுவலகத்துக்குச் செல்ல இக்கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் தனது காரில் செல்ல முயன்றாா். காரை வழிமறிக்கும் வகையில் மங்கலம் தொகுதி நிா்வாகிகள் காருக்கு முன்பாகப் படுத்துக் கொண்டனா்.

இதனால் கோபமடைந்த வெ.வைத்திலிங்கம் காரிலிருந்து இறங்கி நடந்தே அஜந்தா சிக்னல் அருகே சென்றாா். இதை போராட்டத்தில் ஈடுபட்டவா்களே எதிா்பாா்க்கவில்லை. பின்னா் காா் வந்தது. அதில் ஏறி காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்றாா் அவா்.

நெல்லித்தோப்பு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிதான் பேச்சுவாா்த்தைக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகின்றனா் இந்த இரண்டு கட்சியினரும். காரணம், திமுகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகரும் இங்கு திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

ஏற்கெனவே கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த காா்த்திகேயனும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். இதனால் இழுபறி நீடிக்கிறது.

அதேசமயம் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமியும் விரும்பியதாகத் தெரிகிறது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இறுதிநாளான திங்கள்கிழமை காங்கிரஸ், திமுக, பாஜக, உள்பட பல்வேறு கட்சியினா் உள்பட 380 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.