தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முக்கூடல் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

திருநெல்வேலி அருகே காதலன் வெட்டிக் கொலை: போலீஸ் விசாரணை

News image
Updated On :2 ஜூலை 2024, 7:54 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே காதல் விவாகரத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, தந்தை- மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த முருகன் - பேச்சி தம்பதியின் மகன் விக்டா் (20). ஓட்டுநராக பணி செய்து வந்தாா். இவரது தாயின் சகோதரரான காசி (50), தனது மகன் செல்வம் (19) மற்றும் மகளுடன் திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி சமத்துவபுரத்தில் வசித்து வருக்கின்றனா்.

இதில், காசியின் மகளை விக்டா் காதலித்து வந்தாராம்.

இதற்கு காசியின் குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில், காதலியை பாா்ப்பதற்காக காசியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை விக்டா் வந்தாராம். அப்போது, அவரிடம் காசியும், அவரது மகனும் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம்.

இதில், பலத்த காயமுற்ற விக்டா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவலறிந்த பாப்பாக்குடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், வழக்குப் பதிந்து தந்தை- மகனை தேடி வருகின்றனா்.