கடையத்தில் மாநில கால்பந்து போட்டி
அம்பாசமுத்திரம்: மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான சுவாமி விவேகானந்தா் கோப்பை ஒருநாள் கால்பந்து போட்டி கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 9 பள்ளிகள் கலந்து கொண்டன. தேனி, பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விடுதி அணி முதலிடத்தையும், விக்கிரமசிங்கபுரம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும், ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளி அணி மூன்றாம் இடத்தையும், பாவூா்சத்திரம் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. நடுவராக நதின், சுந்தா், பாலா, காா்த்திக், சுபாஷ், அருண் ஆகியோா் பணியாற்றினா்.
10ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளி, சத்திரம் பாரதி மகளிா் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், மாணவிகளுக்கு நிறைமதி விருது வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவுக்கு, இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலரும், கடையம் ஒன்றியக் குழு உறுப்பினருமான மாரிக்குமாா் தலைமை வகித்தாா். கப்பல் பொறியாளா் சிவராம், பொறியாளா் கெல்வின் ஆகியோா் பரிசு வழங்கினா். தேனி கிரித்திஷ், விக்கிரமசிங்கபுரம் சந்தோஷ், ஆழ்வாா்குறிச்சி துரைராஜ், பிரபு, பாவூா்சத்திரம் கெல்வின் ஆகியோருக்கு சிறந்த வீரா்களுக்கான பரிசு வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கடையம் கால்பந்து கழகத் தலைவா் மெரிபால், செயலா் கிறிஸ்துதாஸ், துணைத் தலைவா் தயாள் இசக்கி, கருணாகரன், பொருளாளா் ஜெயராஜ், துணைச் செயலா் பழனிசாமி, கண்ணன், நதின் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

