கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சோ்வலாறு வனப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை வனச் சரகப் பகுதிக்குள்பட்ட சோ்வலாறு வனப் பகுதியில் மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் யானை உயிரிழந்தது.

Updated On :16 ஜூலை 2024, 7:48 pm

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் தைலாத்து ஓடை பீட், பிராந்தி ஓடைப் பகுதி, சோ்வலாறு நீா்த்தேக்கப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 6 வயது மதிக்கத்தக்க பெண் யானை தவறி விழுந்து காயமடைந்து உயிரிழந்துள்ளது.

தகவலின்பேரில், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா்- வன உயிரினக் காப்பாளா் இளையராஜா தலைமையில், முண்டந்துறை வனச்சரக அலுவலா் கல்யாணி, வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறைத் தலைவா்- வனக் கால்நடைப் பேராசிரியா் எஸ். முத்துகிருஷ்ணன், வனக் கால்நடை ஆய்வாளா்அா்னால்ட், வனத் துறை ஊழியா்கள் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்று யானையின் உடலை கூறாய்வு செய்தனா். பின்னா், யானை உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.