இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பாபநாசத்தில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் சுமாா் ஒன்றரை வயது பெண் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

News image

உயிரிழந்த சிறுத்தையைப் பாா்வையிட்ட வனத்துறையினா் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினா்.

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

Syndication

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் சுமாா் ஒன்றரை வயது பெண் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

பாபநாசம் வனச்சரகப் பகுதியில் கல்யாண தீா்த்தத்திற்கும், கீழணைக் குடியிருப்புப் பகுதிக்கும் இடையில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுத்தைக் குட்டி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து, அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலில் வனக் கால்நடை மருத்துவா் மனோகரன், விக்கிரமசிங்கபுரம் கால்நடை உதவி மருத்துவா் ஆறுமுகம் தலைமையில் கால்நடை மருத்துவக் குழுவினா், ஏட்ரி ஆராய்ச்சியாளா் தணிகைவேல், காணிக் குடியிருப்பு சாவித்திரி, பாபநாசம் வனச்சரகா் குணசீலன், வனப் பணியாளா்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்தனா்.

இதையடுத்து, அதே இடத்தில் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது. மேலும், சிறுத்தை தனியாக வேட்டையாட முயன்றபோது, வன விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.