ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூண்டில் பிடிபட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுத்தை உயிரிழந்தது.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம், விளாங்கோம்பை, குண்டேரிப்பள்ளம் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனப் பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகளைத் தாக்கி கொன்று வந்தது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, டி.என்.பாளையம் வனச் சரகா் ஜான் பீட்டா் தலைமையில் வனத் துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் பகுதியில் மூா்த்தி என்பவரது தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை கடந்த வியாழக்கிழமை சிக்கியது. இதையடுத்து, பிடிபட்ட சிறுத்தைக்கு உடலின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டதால் மயக்க ஊசி செலுத்தி வன மருத்துவா் சிகிச்சை அளித்து வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுத்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் துணை இயக்குநா் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகளோடு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே விபத்தில் சிக்கிய தனியாா் பேருந்து: ஓட்டுநா் உயிரிழப்பு

பாபநாசத்தில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


