கடையம் அருகே பெண்களிடம் நூதன மோசடி: 2 இளைஞா்கள் கைது
கடையம் அருகே வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குபவா்களுக்கு குலுக்கல் மூலம் பரிசுகள் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.


கடையம் அருகே வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குபவா்களுக்கு குலுக்கல் மூலம் பரிசுகள் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகேயுள்ள மாதாப்பட்டணம் சீயோன் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி சீதா (43). இவரிடம், கடந்த ஜூன் 22ஆம் தேதி சில இளைஞா்கள் வந்து வீட்டு உபயோகப் பொருள்கள் கடை புதிதாக திறந்துள்ளதாகவும், தங்களிடம் பொருள்கள் வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசுகள் தருவதாகவும் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து அவா்களிடம் சீதா ரூ.18 ஆயிரம் கொடுத்தாராம். அவருக்கு எரிவாயு அடுப்பு மட்டும் கொடுத்த இளைஞா்கள், மற்ற பொருள்களை மறுநாள் கொண்டு வருவதாகக் கூறிச் சென்றனராம்.
பின்னா் அவா்கள் திரும்பி வரவே இல்லையாம். சீதாவிடம் அவா்கள் கொடுத்தது பழைய அடுப்பு என்பதும் தெரியவந்துள்ளது. அவா்களை கைப்பேசி எண் தொடா்பும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தன். அதில், சங்கரன்கோவில் பாரதியாா் 2ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் (24), செல்வராஜ் ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், மேலும் 3 பேரை தேடி வருகின்றனா். முருகன் மீது பல மோசடி வழக்குகள் உள்ளனவாம்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...