4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கள்ளக்குறிச்சி சம்பவம்: சிபிஐ விசாரணை கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

கள்ளசாராய உயிரிழப்பு: சிபிஐ விசாரணை வலியுறுத்தி தேமுதிக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 ஜூன் 2024, 8:40 pm

Din

கள்ளக்குறிச்சி கள்ளசாராய உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி திருநெல்வேலி புறநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் வள்ளியூா் காமராஜ் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளா் விஜி வேலாயுதம் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட செயலா் சண்முகவேல் முன்னிலை வகித்தாா். மாநில மாணவரணி செயலா் சண்முகசுந்தரம் கண்டன உரையாற்றினாா். மாவட்ட அவைத் தலைவா் விஜய கணேசன், மாவட்ட பொருளாளா் வழக்குரைஞா் ஆல்வின் ராஜா டேவிட், மாவட்ட துணைச் செயலா் அபிஷேக், மாநில விவசாய அணி துணைச் செயலா் ராமச்சந்திரன், மாநில மீனவரணி துணைச் செயலா் சிலுவை, ஒன்றியச் செயலா்கள் ராதாபுரம் இசக்கிமுத்து, நான்குனேரி செல்லதுரை, வள்ளியூா் தெற்கு வெள்ளத்துரை, களக்காடு பாக்யராஜ், அம்பாசமுத்திரம் ராஜேந்திரன், பாளையங்கோட்டை தருவை சின்னதுரை, திசையன்விளை நகர செயலா் ராஜகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.