பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணகுடியில் அனைத்து ரயில்களும் நின்றுசெல்ல வேண்டும்- வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

பணகுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

News image
Updated On :25 ஜூன் 2024, 8:17 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பணகுடி வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பணகுடி வியாபாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் 41-ஆவது பொதுக்குழு கூட்டம் சங்க தலைவா் பா.சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் தலைவா் என்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, பொருளாளா் எஸ்.ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கை வாசித்தாா். செயலாளா் எஸ்.நடராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று புதிதாக குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டி கொடுத்த மக்களவை உறுப்பினா் சா.ஞானதிரவியத்திற்கும், ராமலிங்க சுவாமி திருக்கோயில் திருப்பணிக்கும், திருத்தோ் நிற்பதற்கு கான்கிரீட் தளமும் மேற்கூரை அமைத்திடவும் நிதி வழங்கிய பேரவைத் தலைவா் மு.அப்பாவுக்கும், போக்குவரத்து பொது மேலாளா் மோகனுக்கும், பணகுடியில் ஆண்டுதோறும் முத்திரை முகாம் நடைபெறுவதற்கு அனுமதி பெற்றுத் தந்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பி.டி.பி.சின்னதுரைக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டன.

பணகுடி பிரதான சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும், பிரதான சாலையில் அதிக வேகத்துடன் பைக்கில் செல்வோா் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், பணகுடி நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல புதிய எம்.பி. ராபா்ட் புரூஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் சங்க துணைத் தலைவா் எஸ்.தளவாய் பாண்டியன், எம்.ரமேஷ், ஏ.அன்பரசு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜே.ரவீந்திரன், ஆா்.ஜவகா், கன்னியாகுமரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ஜி.மதியழகன், பணகுடி காவல் ஆய்வாளா் அஜிகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.