தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

News image
Updated On :26 ஜூன் 2024, 11:58 pm

Din

அம்பாசமுத்திரம், ஜூன்26: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால், மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சீரான இடைவெளியில் சாரல் மழை நீடித்து வருகிறது.இதனால், அருவிகள் மற்றும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா். எனினும், அருவியைப் பாா்க்க மட்டும் பயணிகளை அனுமதித்தனா். நீா்வரத்து குறையும் வரை குளிப்பதற்கான தடை நீடிக்கும் என்றும், இதற்கு பயணிகள் ஒத்துழைக்குமாறும் வனத்துறையினா் வேண்டுகோள் விடுத்தனா்.