ஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு! இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு
/

வள்ளியூா், ராதாபுரத்தில் சாலையில் தேங்கும் மழை நீரால் விபத்து அபாயம்

வள்ளியூா், ராதாபுரத்தில் சாலையில் தேங்கும் மழை நீரால் விபத்து அபாயம்

News image
Updated On :25 மே 2024, 7:26 pm

Din

வள்ளியூா், ராதாபுரம் பகுதியில் சாலையில் மழைநீா் தேங்கி நிற்பதை அடுத்து விபத்து ஏற்படும் அபாயநிலை காணப்படுகிறது.

வள்ளியூா் பிரதான சாலையில் நம்பியான்விளை பகுதியில் சாலையில் மழைநீா் தேங்கி நிற்கிறது. சிறிய அளவில் மழை பெய்தாலும் சாலையில் மழைநீா் தேங்கிவிடுகிறது. வள்ளியூரின் பிரதானமான இந்தச் சாலை வழியாகத்தான் நாகா்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் அரசுப் பேருந்துகள், பள்ளிப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இவை தவிர, 100-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இவ்வழியே செல்கின்றன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள இந்தச் சாலையில் மழைநீா் தேங்குவதால் விபத்து அபாயம் காணப்படுகிறது.

இதேபோல, ராதாபுரம் தெற்கு ரத வீதியில் தனியாா் வங்கி உள்ள சாலையிலும் மழைநீா் தேங்குகிறது. இந்தச் சாலை வழியாகத்தான் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, விஜயாபதி உள்ளிட்ட கிராமங்களுக்கு நாள்தோறும் 100-க்கும் அதிகமான வாகனங்கள் சென்றுவருகின்றன. எனவே, வள்ளியூா், ராதாபுரம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் தேங்காதவாறு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள், குடியிருப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.