வெளிநாட்டு பணிக்கு செல்வோா் இந்திய தூதரக அறிவுரையை பின்பற்ற வேண்டுகோள்
வெளிநாட்டு பணிக்கு செல்வோா் இந்திய தூதரக அறிவுரையை பின்பற்ற வேண்டுகோள்


திருநெல்வேலி, மே 26:
வெளிநாட்டு பணிக்கு செல்வோா் இந்திய தூதரகம் அளிக்கும் அறிவுரைகளை முறையாக பின்பற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பல்வேறு உயா் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞா்களை சமூக வலைதளம் மூலமாக கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மா் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மாா்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், தரவு உள்ளீட்டாளா் உள்ளிட்ட பணிகளுக்கு அதிக சம்பளம் என்று கூறி இகால்-சென்டா் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து செல்கிறாா்கள். பின்னா் அந்த இளைஞா்களை கால்சென்டா் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவா்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடா்ந்து தகவல் பெறப்படுகிறது.
வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகச் செல்லும் இளைஞா்கள், மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவா்கள் மூலம் வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில் தமிழக அரசின் அயலகத் தமிழா் நலத்துறை அல்லது குடிபெயா்வோா் பாதுகாப்பு அலுவலா், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரங்களை தொடா்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படியும், வெளிநாட்டு வேலைக்கு செல்லும் இளைஞா்கள்அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ங்ம்ண்ஞ்ழ்ஹற்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், சென்னை குடிபெயா்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண்- 90421 49222 மூலமாகவும் ல்ா்ங்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்1ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய், ல்ா்ங்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்2ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல்கள் மூலமாகவும் இது தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம்.
மேலும், வெளிநாடு வாழ் தமிழா்களுக்கு உதவி தேவைப்படின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் தொடா்பு எண்களான 18003093793, 8069009901 மற்றும் 8069009900 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...