புதுதில்லி: உலகளாவிய பதற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்தியப் பங்குச் சந்தையில் நித்தம் எதிரொலிக்கும் நிலையில், இது பங்குச் சந்தையின் நிச்சயமற்ற தன்மையை மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு, மற்றும் உயர்ந்த வரும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிறுவன வருவாயில் ஏற்படுத்தும் தாக்குதல் உள்ளிட்டவையால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மார்ச் மாதம் ரூ. 88,180 கோடி அளவுக்கு முதலீடுகளை விற்பனை செய்தனர்.
தேசிய பத்திரங்கள் வைப்பு நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 22,615 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்தத் தொகை கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்ததாகும்.
மார்ச் மாதத்தில் (மார்ச் 20 நிலவரப்படி) ஒவ்வொரு வர்த்தக நாளிலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பனை செய்ததில், சுமார் ரூ.88,180 கோடி மதிப்புள்ள முதலீடை திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த விற்பனையை தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் இதுவரையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான பங்குகளை விற்று வெளியேற்றியுள்ளனர்.
இந்தத் தொடர் விற்பனை அழுத்தத்திற்கு, உலகளாவிய பொருளாதாரச் சவால்களும், அதிகரித்த வரும் நிச்சயமற்ற தன்மையுமே காரணம் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிறுவன வருவாயை பாதிக்கக்கூடும் என்ற நிலையால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்துள்ளனர்.
மேற்கு ஆசியாவில் பதற்றம், கச்சா எண்ணெய் விலை நிலைபெற்றால் மட்டுமே சந்தை மேம்படக்கூடும்.
Summary
Foreign investors have pulled out Rs 88,180 crore from Indian equities so far this month.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

போர்நிறுத்தம் எதிரொலி: எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகள் உயர்வு!

போர் எதிரொலி: மார்ச் மாதம் ரூ. 1.14 லட்சம் கோடி நிதியை வெளியேற்றிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


