/

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் குறியீடு 416.72 புள்ளிகள் சரிந்து 76,886.91 புள்ளிகளிலும், நிஃப்டி குறியீடு 97 புள்ளிகள் சரிந்து 23,995.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

Sensex - file picture

Updated On :28 ஏப்ரல் 2026, 11:32 am

மும்பை: நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாகனத் துறை பங்குகளின் பரவலான விற்பனையை தொடர்ந்து, நிஃப்டி 50 குறியீடு 24,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்த நிலையில், சென்செக்ஸும் 416.72 புள்ளிகள் சரிந்து 76,886.91 புள்ளிகளாக நிலைபெற்றது.

அரசியல் பதற்றங்கள், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவை, முதலீட்டாளர்களை அச்சத்தில் அழ்த்தியது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் குறியீடு 416.72 புள்ளிகள் சரிந்து 76,886.91 புள்ளிகளாகவும், நிஃப்டி குறியீடு 97 புள்ளிகள் சரிந்து 23,995.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல் டெக், இன்டர்குளோப் ஏவியேஷன், மாருதி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் சரிந்தும் மறுபுறம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி 50 குறியீட்டில், மாருதி சுஸுகி, ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, நெஸ்லே, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.3 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.4 சதவீதமும் உயர்ந்தன.

துறைவாரியாகப் பார்க்கையில், பொதுத்துறை வங்கிகள் குறியீடு 2 சதவீதம் சரிந்தன. அதேவேளையில் தனியார் வங்கிகள் மற்றும் வாகனத் துறை குறியீடுகள் தலா 1 சதவீதம் வீதம் சரிந்தன. தகவல் தொழில்நுட்பம் குறியீடு 0.7 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 0.4 சதவீதமும் சரிந்தன. மறுபுறம் எரிசக்தித் துறை குறியீடு 1.2 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை குறியீடு 1.5 சதவீதமும், உலோகத் துறை குறியீடு 0.5 சதவீதமும் உயர்ந்தன.

என்எல்சி இந்தியா, வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ், கிர்லோஸ்கர் ஆயில், அதானி பவர், வெல்ஸ்பன் கார்ப், க்ளென்மார்க் பார்மா, ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், பவர் ஃபைனான்ஸ், செயில், என்எம்டிசி, ஏதர் எனர்ஜி, ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி, அதானி எனர்ஜி, ஹெச்எஃப்சிஎல், ஹிண்டால்கோ இண்டஸ்டல், இன்டஸ்ட்ல்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 150 நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில், 52 வார உச்சத்தை எட்டியது.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், நேற்று (திங்கள்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,151.48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஆசியச் சந்தைகளில், ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன. அதே வேளையில், தென் கொரியாவின் முக்கியக் குறியீடான கோஸ்பி மட்டும் உயர்வுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் உயர்ந்த நிலையில் வர்த்தகமாகின. அமெரிக்கச் சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) எவ்வித மாற்றமுமின்றி சமமாக நிறைவடைந்தன.

சர்வதேச ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, 2.97 சதவீதம் உயர்ந்து பேரலுக்கு ஒன்றுக்கு 111.4 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.