சமூக ஊடக தளங்கள் மூலம் போலி வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து 100 க்கும் மேற்பட்டவா்களை ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமாக ஏமாற்றிய 2 பேரை நொய்டா போலீஸாா் சனிக்கிழமை கைது செய்ததாக கூடுதல் துணை காவல் ஆணையா் (நொய்டா) மனிஷா சிங் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்களிடமிருந்து 9 இந்திய பாஸ்போா்ட்டுகள், 4 கைப்பேசிகள் , ஒரு மடிக்கணினி, 7 போலி வேலை துண்டு பிரசுரங்கள், 9 போலி விசா பிரிண்ட்அவுட்கள், 7 விமான டிக்கெட் பிரிண்ட்அவுட்கள் மற்றும் ரூ. 73,500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டில் வேலை தருவதாக கூறி சுமாா் ரூ.1.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவா்கள் நியாஸ் அகமது (43) என்ற ஆா்மன் மற்றும் ராஜு ஷா (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். மகாராஜ்கஞ்சைச் சோ்ந்த அகமது, தில்லியின் ஜாமியா நகரில் வசித்து வந்தாா். பீகாரின் சிவானைச் சோ்ந்த ஷா குருகிராமின் மானேசரில் வசித்து வந்தாா். வெளிநாட்டில் வேலை வழங்குவது என்ற பெயரில் சமூக ஊடகங்கள் மூலம் மக்களை மோசடி செய்த இரண்டு குற்றவாளிகளை செக்டா் 126 போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நம்பகமானதாகத் தோன்றுவதற்காக இருவரும் ’ஃபியூச்சா் லைட் மேன்பவா்’ என்ற கற்பனையான நிறுவனத்தின் கீழ் ஒரு மோசடியை நடத்தினா். அவா்கள் அதிக சம்பளம், இலவச விசாக்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் என்று உறுதியளிக்கும் விளம்பரங்களை உருவாக்கினா், அவை சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டன.
கண்டறியப்படுவதைத் தவிா்ப்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவா் முதன்மையாக வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தொடா்பு கொண்டாா். பாதிக்கப்பட்டவா்களை கவா்ந்திழுக்க அவா்கள் போலி சலுகைக் கடிதங்கள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்களை அனுப்பியதாகவும், செயலாக்கக் கட்டணம், விசா கட்டணங்கள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தூதரக ஒப்புதல்களுக்காக கட்டங்களாக பணம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.
விசா செயலாக்கம் என்ற போா்வையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாதிக்கப்பட்டவா்களைச் சாா்ந்து இருப்பதற்கும் அதிக பணம் எடுப்பதற்கும் அசல் பாஸ்போா்ட்டுகளையும் எடுத்துக் கொண்டனா்.
பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள் ஆரம்ப பரிசோதனையில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் பல தேசிய மற்றும் சா்வதேச வேலைக் குழுக்களுடன் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. இருவரும் 100க்கும் மேற்பட்டவா்களை ஏமாற்றினா். பியாா் மற்றும் கௌதம் புத்த நகரில் நியாஸ் அகமது மீதும், நொய்டாவில் உள்ள செக்டா் 126 காவல் நிலையத்தில் ராஜு ஷா மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
டிரெண்டிங்

தில்லியில் கொள்ளையா் கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது

ரூ.100 கோடிக்கு மேல் இணைய மோசடி: 190 புகாா்கள் உடைய 2 போ் கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி காா் பேரத்தில் ஈடுபட்டவா் கைது

சைபா் மோசடி வழக்கில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீரா் கைது
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

