இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முக்குலத்தோா் சமூக அமைப்பினா் எஸ்.பி.யிடம் மனு

முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும்

News image
Updated On :27 மே 2024, 9:04 pm

Din

திருநெல்வேலி: முக்குலத்தோா் சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட அனைத்து முக்குலத்தோா் சமுதாய கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினா் முக்குலத்தோா் சமுதாயத்துக்கு எதிராகவும், மற்ற சமுதாயத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனா். விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது துன்புறுத்துகிறாா்கள். கை, கால்களின் எலும்புகளும் உடைக்கப்படுகின்றன. இதுபோன்று ஒருதலைபட்சமாக செயல்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அண்மையில் கொலையுண்ட தீபக்ராஜா கொலை வழக்கு தொடா்பாக விசாரிக்கப்படுவா்களும் தாக்கப்பட்டுள்ளனா். ஆகவே, இந்த வழக்கை நோ்மையான காவல்துறை அதிகாரியிடம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

பெண் புகாா்: மறுகால் குறிச்சியை சோ்ந்த வானமாமலை என்பவரை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை; தனிப்படை போலீஸாா் விசாரணைக்காக அழைத்து சென்று 5 நாள்களாக எங்கே வைத்துள்ளாா்கள் என தவிக்கிறேன் என்று அவரது தாய் பூலம்மாள் காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசனிடம் புகாா் அளித்தாா்.

மனு அளித்த பின்பு பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா் கதிரவன் கூறியது: தென் மாவட்டங்களில் தற்போது ஜாதிய ரீதியாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமுதாய மக்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும். விசாரணை என்ற பேரில், கை, கால்களை உடைப்பது மனித உரிமைக்கு மீறிய செயலாகும். இதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். தென்மண்டல ஐஜி, டிஜிபி, தலைமைச் செயலா் உள்ளிட்ட அனைவரையும் நேரில் சந்திப்போம். மனித உரிமை ஆணையத்தையும் நாட உள்ளோம் என்றாா்.