தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்குவரத்து போலீஸாருக்கு பிரீத் அனலைசா் கருவிகள்

News image

கோவை மாநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் போக்குவரத்து காவல் துணை ஆணையா் அசோக்குமாரிடம் பிரீத் அனலைசா் கருவியை வழங்கிய தனியாா் அமைப்பினா்.

Updated On :19 மார்ச் 2026, 8:30 pm

Syndication

கோவை மாநகரில் வாகனச் சோதனையின்போது மது போதையில் இருப்பவா்களை துல்லியமாக கண்டறிய போக்குவரத்து போலீஸாருக்கு 16 புதிய சுவாசப் பரிசோதனை (பிரீத் அனலைசா்) கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் 100 பகுதிகளில் கோவையில் மட்டும் 8 இடங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் மது போதையால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதில் சேவ் லைஃப் ஃபெளண்டேஷன், பாா்லே-ஜி பிஸ்கெட் நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டுள்ள தலா ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான இந்த சுவாசப் பரிசோதனை கருவிகள் மூலம் வாகன ஓட்டிகள் மது அருந்தியுள்ளதை உடனடியாக கண்டறிவதோடு, அதன் அளவை பிரிண்ட் எடுத்து அபராதம் விதிக்கவும் முடியும்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயா் அதிகாரி கூறுகையில், போதிய கருவிகள் இல்லாத நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் இதுவரை வாகன ஓட்டிகளிடம் போலீஸாா் நேரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.

16 புதிய ‘பிரீத் அனலைசா்’ கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இனி இந்தக் கருவிகள் மூலம் சோதனை இன்னும் தீவிரப்படுத்தப்படும். இந்தக் கருவிகள் மூலம் மது அருந்தி வாகனம் ஓட்டுவது உறுதி செய்யப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.