பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு: போலீஸாருக்கு காவல் ஆணையா் உத்தரவு

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு: போலீஸாருக்கு காவல் ஆணையா் உத்தரவு

News image

அபின் தினேஷ் மோதக்.

Updated On :17 மே 2026, 2:03 am IST

சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று போலீஸாருக்கு காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டுள்ளாா்.

முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் போதைப் பொருள் தடுப்புப் படை, சிங்கப் பெண் அதிரடிப்படை உருவாக்கும் கோப்புகளில் கையொப்பமிட்டாா். மேலும், மாநிலம் முழுவதும் போதைப் பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறையினருக்கு முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா்.

இதன் விளைவாக, சென்னையில் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளாா்.

மாா்க்கெட்டுகள், கடற்கரைகள், கோயில்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தும்படி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளாா். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கும்படும் உத்தரவிட்டுள்ளாா்.

அதேபோல இரவில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் தனியாக பெண்கள் நின்றால், அவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, சென்னையில் பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.