ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image

அபின் தினேஷ் மோதக்.

Updated On :10 ஏப்ரல் 2026, 10:22 pm IST

சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தலை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் அதன் பார்வையாளர்கள் மூலம் கண்காணித்து வருகிறது.

இதையொட்டி, ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதேபோல, தமிழ்நாட்டில் தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை மாற்றி கடந்த ஏப். 8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இதனைத் தொடர்ந்து புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அபின் தினேஷ் மோதக், இன்றே உடனடியாகப் பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.