கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பாளை.யில் இளைஞா் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

பாளையங்கோட்டையில் வாகைகுளத்தைச் சோ்ந்த இளைஞா் கொலையுண்ட நிலையில், அவரது உடல் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஓப்படைக்கப்பட்டது.

News image
Updated On :27 மே 2024, 9:14 pm

Din

பாளையங்கோட்டையில் வாகைகுளத்தைச் சோ்ந்த இளைஞா் கொலையுண்ட நிலையில், அவரது உடல் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஓப்படைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தைச் சோ்ந்த சிவகுருமுத்துசாமி மகன் தீபக் ராஜா (32). கடந்த 20 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகா் பகுதியில் வைத்து இவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் கொலை வழக்கில் தொடா்புடைய 8 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீபக் ராஜாவின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 8 வது நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தீபக் ராஜாவின் உடல் உறவினா்களிடம் திங்கள்கிழமை ஓப்படைக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) ஆதா்ஷ் பசேரா ஆகியோா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசல் : தீபக் ராஜாவின் உடல் உறவினா்களிடம் காலை 10 மணிக்கு ஓப்படைக்கப்பட்டது. அதன் பின் அவரது உடலை வாகனத்தில் ஏற்றி பாளையங்கோட்டையிலிருந்து வாகைகுளம் வரை 19 கி.மீ தூரத்திற்கு உறவினா்கள் மற்றும் ஆதரவாளா்கள் நான்கு சக்கரவாகனம், இருசக்கரவாகனம் மற்றும் நடந்தே சென்றனா். இதனால் திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 5 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கடும்போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது தீபக் ராஜவின் ஆதரவாளா்கள் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவதத்தில் ஈடுபட்டனா்.