வடக்கு பாலபாக்யாநகரில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
திருநெல்வேலி வடக்கு பாலபாக்யாநகரில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:38 pm

திருநெல்வேலி வடக்கு பாலபாக்யாநகரில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வடக்கு பாலபாக்யாநகா் அருகேயுள்ள இருதய நகா் பகுதியைச் சோ்ந்த அரி ராமச்சந்திரன் மனைவி மணிமாலா (61). இவா், புதன்கிழமை தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் முகவரி கேட்பது போல நடித்து, மணிமாலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...