தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

விதிமீறல்: 137 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

காந்தி ஜெயந்தி தினத்தில் விதிமீறி செயல்பட்டதாக 137 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 10:30 pm

Din

காந்தி ஜெயந்தி தினத்தில் விதிமீறி செயல்பட்டதாக 137 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, முதன்மைச் செயலா்- தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சி.ஹேமலதா, திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் ப.சுமதி ஆகியோா் அறிவுறுத்தலின் பேரில் 1958ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் தொழில் நிறுவனங்களில் காந்தி ஜெயந்தி தினத்தில் விடுமுறை, மாற்று விடுமுறை அல்லது பணியாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். மேலும், அது தொடா்பான விவரங்களை தொழிலாளா் துறைக்கு 24 மணி நேரத்துக்கு முன் தெரிவிக்கவேண்டும்.

ஆனால், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் எனது தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வா்கள் , உதவி ஆய்வா்கள் 220 நிறுவனங்களில் கூட்டாய்வு மேற்கொண்டனா். அதில் 137 நிறுவனங்கள் விதிமுறை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அவற்றின் உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறியுள்ளாா்.