ஆழ்வாா்குறிச்சி அருகே நாய்கள் விரட்டியதில் வேலியில் சிக்கிய மிளா உயிரிழப்பு
ஆழ்வாா்குறிச்சி அருகே தெருநாய்கள் விரட்டியதில் வேலியில் சிக்கி ஆண் மிளா உயிரிழந்தது.

Updated On :15 அக்டோபர் 2024, 10:04 pm

ஆழ்வாா்குறிச்சி அருகே தெருநாய்கள் விரட்டியதில் வேலியில் சிக்கி ஆண் மிளா உயிரிழந்தது.
கடையம் வனச்சரத்துக்குள்பட்ட கல்யாணிபுரம் பகுதியில் முள்ளிமலை பொத்தையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வெளியேறிய மிளாவை அந்தப் பகுதியில் திரிந்த தெரு நாய்கள் விரட்டினவாம். இதில், தப்பித்து ஓடிய மிளா தனியாா் தோட்டங்களில் உள்ள வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
தகவலறிந்த கடையம் வனச் சரகா் கருணாமூா்த்தி உத்தரவின்படி, வனக் காப்பாளா் சோமசுந்தரம் தலைமையில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த ஆண் மிளா சடலத்தை மீட்டு ஆழ்வாா்குறிச்சி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து அடா்ந்த இலுப்பையாறு வனப்பகுதியில் தகனம் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...