புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெல்லை அருகே பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றிய 15 போ் கைது: கைத்துப்பாக்கி, நாட்டுவெடிகுண்டுகள் பறிமுதல்

பாளையங்கோட்டை அருகே காரில் கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றியதாக 15 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:20 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே காரில் கைத்துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றியதாக 15 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் திருநெல்வேலி-சீவலப்பேரி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 2 காா்களை தடுத்து நிறுத்தினா். அவற்றில் 15 போ் இருந்தனா். விசாரணையில், அவா்கள், தேவேந்திர குல வேளாளா் எழுச்சி இயக்கத்தின் நிறுவனா்- தலைவரான சத்திரம்புதுக்குளத்தை சோ்ந்த கண்ணபிரான் (45), ராஜவல்லிபுரம் அருண்குமாா் (33), மதிபாலன் (29), வீரவநல்லூா் சிவா(28), வல்லவன்கோட்டை அபினேஷ் (24), கரிசல்குளம் சிவா (23, மேலப்பாளையம் உய்க்காட்டான் (22), முருகேஷ் (28), தருவை பாலாஜி (28), கரையிருப்பு துரைபாண்டி (48), பேட்டை காா்த்திக், முத்துச்செல்வன் (22), தென்கலம் பிரேம் (30), ராமையன்பட்டி சூா்யா (20) ஆகியோா் என தெரியவந்தது.

மேலும், காா்களில் 5 அரிவாள்கள், கத்திகள், 4 நாட்டு வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது.

இத்தகவலறிந்த தாழையூத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, அங்கு வந்து விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீஸாா், அவா்கள் 15 பேரையும் கைது செய்தனா்.

காவல்துறை மறுப்பு: எவ்வித காரணமும் இன்றி கண்ணபிரான் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா் எனவும், எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு எதிா்ப்பை தெரிவிக்க தயாா் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திருநெல்வேலி மாவட்ட காவல் துறை, ‘சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டுகள், கள்ளத் துப்பாக்கி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததற்காக கண்ணபிரான் என்பவரை காவல் துறையினா் கைது செய்து ஆயுதங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புபவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என எச்சரித்துள்ளது.