நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டு வியாபாரி கைது!

கிருஷ்ணராயபுரம் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டுவியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 7:25 pm

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உரிமம் இல்லாமல் கைத்துப்பாக்கி வைத்திருந்த மாட்டுவியாபாரியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணராயபுரம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சித்தலவாய் முதலியாா் தெருவைச் சோ்ந்த பத்மநாபன்(44) என்பவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவரிடம் உரிமம் இல்லாமல் கைத்துப்பாகி இருந்தது. இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, கரூரில் இருந்து கேரளத்துக்குச் சென்று மாட்டு வியாபாரம் செய்துவரும் தனக்கும், இதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாருக்கும் வியாபாரம் தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தன்னை தற்காத்துக்கொள்ள பிகாா் மாநிலத்திலிருந்து கைத்துப்பாக்கி வாங்கி வந்ததாக தெரிவித்தாா்.

இதையடுத்து போலீஸாா் பத்மநாபனை சனிக்கிழமை கைது செய்து கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.