அச்சம்பட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவுக்கு பயிா் சாகுபடி பயிற்சி
அச்சம்பட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவுக்கு பயிா் சாகுபடி பயிற்சி

அச்சம்பட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி அளித்த வேளாண் துறையினா்.

அச்சம்பட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி அளித்த வேளாண் துறையினா்.
மானூா் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்(அட்மா) கீழ் மாநில வேளாண் வளா்ச்சி திட்ட வழிகாட்டுதலின்படி, அச்சம்பட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழுவுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் சிறுதானியங்கள் சாகுபடி, அதன் நன்மைகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளண் வளா்ச்சித் திட்டம் ஆகியவை குறித்து மானூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இசக்கியப்பன் பேசினாா். அச்சம்பட்டி ஊராட்சித் தலைவா் அல்லிதுரை சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டாா்.
வேளாண்மை அலுவலா் ராமகிருஷ்ணன், துறை சாா்ந்த திட்டங்களையும் மண் பரிசோதனை, விதைநோ்த்தி, விதை கடினப்படுத்துதல், வறட்சி மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
வேளாண்மை அலுவலா் வினோதினி, வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள மானியத் திட்டங்கள், கிசான் கடன் அட்டை பெறும் வழிமுறைகள், பிரதமரின் கௌரவ ஊக்கத் தொகை திட்டம் குறித்தும், உதவி தோட்டக்கலை அலுவலா் பிரவீன் தோட்டக்கலைத் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலா் ஷீபா பயறுவகை பயறுகள், மக்காச்சோளம், நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பம் பற்றியும், உதவி தொழில்நுட்ப மேலாளா் முருகானந்தம், உழவன் செயலி பதிவிறக்கம்-பயன்பாடுகள் குறித்தும் விளக்கினா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் முருகானந்தம், சதன்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...