சிறிய ஜவுளிப் பூங்கா அமைக்க 50 % மானியம்
திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்முனைவோா் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில்முனைவோா் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செய்திக்குறிப்பு: ஜவுளித் துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதி வாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாடு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.5 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.
சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களால் வளா்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அன்னியச்செலாவனி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். மேற்படி திட்டம் குறித்த விழிப்புணா்வு கூட்டம், எனது (ஆட்சியா்) தலைமையில் அக்.21ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோா்,, ஜவுளி தொழில் சாா்ந்த சங்கங்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...