புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தெற்குவள்ளியூா் கோயில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூா் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீதுா்கா தேவி, அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா கடந்த 3 நாள்கள் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:26 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூா் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீதுா்கா தேவி, அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடைவிழா கடந்த 3 நாள்கள் கொண்டாடப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை (அக்.14) இரவு 7 மணிக்கு குடி அழைப்புடன் கொடைவிழா தொடங்கியது. இரவு 11 மணிக்கு மாகாப்பு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேளதாளத்துடன் புனித தீா்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது. 11 மணிக்கு கன்னி விநாயகா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா். நண்பகல் 1 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு பொங்கலிடுதலும் இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

இரவு 1 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது. புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு மஞ்சள் நீராட்டும் அதனைத் தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றன.