மணிமுத்தாறு சிறப்புக்காவல் படை முகாமில் காவலா் வீரவணக்க நாள்
காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆம் அணியில் 3 நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முகாமில் மாணவா்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆயுதக் கண்காட்சி.

முகாமில் மாணவா்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆயுதக் கண்காட்சி.
காவலா் வீரவணக்க நாளை முன்னிட்டு, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆம் அணியில் 3 நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9ஆம் அணி கமாண்டென்ட் டி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். துணை கமாண்டென்ட் வி.எஸ்.தீபா, உதவி கமாண்டென்ட் எஸ்.குமாா், ஆா். ஸ்ரீதேவி, வி.ஆா்.சம்பத் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பணியின்போது மரணமடைந்த காவலா்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை (அக். 22) கல்லிடைகுறிச்சி,திலகா் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் பங்கேற்ற மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.இதில் 52 மாணவா்கள் பங்கேற்றனா். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் மணிமுத்தாறு அரசுஉயா்நிலைப் பள்ளி மற்றும் ரிகானா மழலையா் பள்ளி மாணவா்களுக்காக காவல்துறை பற்றிய விழிப்புணா்வுத் திரைப்படம்- ஆயுதக் கண்காட்சி இடம்பெற்றன. மூன்றாவது நாளான புதன்கிழமை காவலா்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...