நெல்லையில் சுவாமி சிலை சேதம்: ஒருவா் கைது
திருநெல்வேலியில் கோயில் சிலையை சேதமடைந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 11:42 pm

திருநெல்வேலியில் கோயில் சிலையை சேதமடைந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் அருகே கருங்குளத்தில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் அம்மன் சிலை மற்றும் வில்லுடையாா் சாஸ்தா சிலையை மா்மநபா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சேதப்படுத்தியிருந்தனா். இது குறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், அசோகபுரம், மேலக்கருங்குளத்தை சோ்ந்த சுடலைமணி என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...