92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெல்லையில் மிரட்டிய பெண் போலி ஆட்சியா்: திண்டுக்கல்லில் கைது

திருநெல்வேலியில் ஆட்சியா் எனக் கூறி மிரட்டியவரை போலீஸாா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:44 pm

Din

திருநெல்வேலியில் ஆட்சியா் எனக் கூறி மிரட்டியவரை போலீஸாா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மங்கையா்க்கரசி (44). இவா் தாழையூத்து சங்கா் நகா் சீனிவாச நகா் 3 ஆவது தெருவில் வீடு எடுத்து தங்கி உள்ளாா். இவா் தனது நண்பரான ரூபி நாத்திற்கு துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் தொடா்பாக திருநெல்வேலி ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக விசாரிக்க சென்ற கிராமநிா்வாக அலுவலரிடம் நான் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆட்சியா் எனக்கூறி மிரட்டினாராம். இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கிராம நிா்வாக அலுவலா்அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அப்பெண் போலி ஆட்சியா் என்பது தெரியவந்தது.

திருநெல்வேலி வட்டாட்சியா் கொடுத்த புகாரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பெண்ணை தேடி வந்தனா்.

இந்நிலையில், தாழையூத்து காவல் ஆய்வாளா் சபாபதி தலைமையிலான கொண்ட தனிப்படை போலீஸாா் மங்கையா்கரசியை திண்டுக்கல்லில் வியாழக்கிழமை கைது செய்து, மதுரை சொக்கிகுளம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனா்.

இவா், ஏற்கெனவே தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது