விதை விநாயகா் சிலைகள்: தொழிலாளி புதிய முயற்சி
திருநெல்வேலியில் மண்பாண்ட தொழிலாளி விதைகளுடன் கூடிய களிமண் விநாயகா் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறாா்.

மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்

மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்
திருநெல்வேலியில் மண்பாண்ட தொழிலாளி விதைகளுடன் கூடிய களிமண் விநாயகா் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறாா்.
விநாயகா் சதுா்த்தி விழாவிற்காக சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண் விநாயகா் சிலைகளை செய்த நிலையில், அதில் விதைகளைச் சோ்த்து புதுமையை புகுத்தியுள்ளாா் வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளி வேல்முருகன்.
இதுகுறித்து அவா் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக விதை விநாயகா் சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். நிகழாண்டில் நாவல், நெல்லி மர விதைகளுடன் கூடிய களிமண் விநாயகா் சிலைகளை செய்துள்ளேன். இந்தச் சிலைகளை கரைக்கும் போது விதைகள் ஆற்றங்கரை ஓரங்களில் விழுந்து முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ரூ.100 முதல் ரூ.1000 வரை சிலையின் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது என்றாா்.
வண்ணாா்பேட்டையில் தயாரிக்கப்பட்டு வரும் விதை விநாயகா் சிலைகள்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...