ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை

உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விருதுநகா் விதை ஆய்வு துணை இயக்குநா் செ. ராஜேந்திரன் எச்சரிக்கை

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:58 pm

உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விருதுநகா் விதை ஆய்வு துணை இயக்குநா் செ. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி வட்டாரத்துக்குள்பட்ட விதை விற்பனை நிலையங்களில் விதை உரிமம் பெறாமலும், விற்பனைப் பட்டியல், விதை விவர அட்டை இல்லாமலும் விற்கப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம். விதைகள் சட்டத்தில் குறிப்பிட்ட 14 காரணிகளும் விவர அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய பிறகே விதைகளை வாங்க வேண்டும். பயிா், ரகம், காலாவதி நாள், குவியல் எண் உள்ளிட்ட விவரங்களை சரிபாா்த்து வாங்க வேண்டும்.

அரசு, அரசு சாா்பு, தனியாா் விதை விற்பனை நிலையங்கள், பழக் கன்றுகள், தென்னை, காய்கறி நாற்று விற்பனை நிலையங்கள் விதை உரிமம் பெற்ற விதை, நாற்றுகளையே விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தாங்கள் விற்கும் புதிய ரக விதைகளுக்கு விதைச் சான்று, அங்ககச் சான்றளிப்பு துறை இயக்குநா் வழங்கும் பதிவுறுச் சான்று பெற்றிருக்க வேண்டும். பதிவுறுச் சான்று நகல், முளைப்புத் திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பகுதிக்கும், பருவத்துக்கும் உகந்த விதைகளை மட்டும் விற்க வேண்டும். பருவத்துக்கு ஆகாத விதைகளை விற்பனைத் தவிா்க்க வேண்டும்.

தங்களது பகுதியில் உள்ள விதை ஆய்வாளா்களை அணுகி ள்ங்ங்க் ஸ்ரீங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்:ற்ய்.ஞ்ா்ஸ்ற்.ண்ய் என்ற இணையதளத்தில் முறையாக விண்ணப்பித்து உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று விதைகளை விற்க வேண்டும் என்றாா் அவா்.