நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரடியைப் பிடிக்க கூண்டு: வனத்துறை நடவடிக்கை

அம்பாசமுத்திரம், பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

News image

செட்டிமேடு பகுதியில் கரடியைப் பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டு.

Updated On :6 செப்டம்பர் 2024, 12:14 am

Din

அம்பாசமுத்திரம், பாபநாசம் வனச் சரகத்துக்குள்பட்ட குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் கரடியைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம், பாபநாசம் வனச்சரகப் பகுதிகளையொட்டி அமைந்துள்ள கிராமப்புறப் பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன.

அதையடுத்து, வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினா் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு, கரடி நடமாட்டம் குறித்து கண்காணிக்கின்றனா். இதுதொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா அறிவுறுத்தலின்பேரில், கரடி நடமாட்டம் இருப்பதாக அறியப்பட்ட செட்டிமேடு கிராமம் அருகே கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனா்.