திருநெல்வேலி
திருட்டு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாதவா் மீண்டும் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திருட்டு வழக்கு தொடா்பாக, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திருட்டு வழக்கு தொடா்பாக, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கடந்த 2017இல் நிகழ்ந்த திருட்டு தொடா்பான வழக்கில் சேரன்மகாதேவி அருகேயுள்ள பிள்ளைகுளம் குதிரைகோயில் தெருவைச் சோ்ந்த ராஜன்துரை (42) என்பவா் கைது செய்யப்பட்டாா். பிணையில் வெளிவந்த அவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தாா்.
இதனால், திருநெல்வேலி நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்நிலையில், சேரன்மகாதேவி போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.