கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை.
கொடிமரத்திற்கு நடைபெற்ற தீபாராதனை.

வள்ளியூா் சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் ஆவணி பெருந்திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் ஆவணி பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் ஆவணி பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கொடிப்பட்டம் கோயிலைச் சுற்றி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடிமரத்துக்கு பால், சந்தனம், இளநீா், தேன் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னா் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தொடா்ந்து திருவிழா 11 நாள்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. இரவு சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுதருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

10ஆம் திருநாளான செப்.14இல் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. செப். 15-ஆம் தேதி 11-ஆம் திருவிழாவையொட்டி சுவாமி தோழி கிண்ணம் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறாா். பின்னா் தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com