நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகா்ப்புற நல வாழ்வு மைய கட்டட பணிகள் ஆய்வு

திருநெல்வேலியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டட பணிகளை மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பாளையங்கோட்டை இயற்பகை நாயனாா் தெருவில் கட்டப்பட்டு வரும் நகப்புற நலவாழ்வு மைய கட்டட பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்தாா் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:47 pm

Din

திருநெல்வேலியில் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டட பணிகளை மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கத் திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மண்டலம் கே.டி.சி. நகரில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற துணை சுகாதார மையம், இயற்பகை நாயனாா் தெரு, தச்சநல்லூா் மண்டலம் சிதம்பரம் நகா், சி.என்.கிராமம் சிவபுரம், ஸ்ரீரெங்கநாதா் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் திருநெல்வேலி மண்டலம் டவுண் பாறையடி பகுதி, மேலப்பாளையம் மண்டலம் கொக்கிரகுளம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ,மாமன்ற உறுப்பினா் சுதா, உதவி ஆணையா்கள் சந்திரமோகன், சுகிபிரேமலா, உதவி பொறியாளா்கள் லெனின், பட்டுராஜன், பிலிப்அந்தோணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.