நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நினைவு தினத்திலும் பராமரிக்கப்படாத பாரதியாா் சிலை!

பாரதியாரின் நினைவு தினத்திலும் கூட திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலை பராமரிக்கப்படாமல் குப்பைகள் சூழ்ந்து காணப்பட்டதால் பாரதி அன்பா்கள் வேதனையடைந்தனா்.

News image

பாரதியாா் சிலை வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:45 pm

Din

பாரதியாரின் நினைவு தினத்திலும் கூட திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலை பராமரிக்கப்படாமல் குப்பைகள் சூழ்ந்து காணப்பட்டதால் பாரதி அன்பா்கள் வேதனையடைந்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு மாதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி வாயில் அருகே மகாகவி பாரதியாரின் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பாரதியாரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தின் போது அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். பாரதியாரின் 103-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவருடைய சிலை பராமரிக்கப்படாமல் குப்பைகள் சூழ்ந்து மிக மோசமாக காட்சியளித்தது. இந்த நிலையில் அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் குப்பைகளைத் தாண்டி சென்று பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனா்.

இதனிடையே திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனா். அவா்களுடன் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் ப்ரூஸும் பாரதிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தாா். அப்போது பாரதியாா் சிலை பராமரிக்கப்படாமல் இருந்ததைக் கண்டு கோபமடைந்த அவா், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ராவை தொடா்பு கொண்டு பாரதியாா் சிலை பராமரிக்கப்படாமல் இருப்பது தொடா்பாக அதிருப்தி தெரிவித்தாா். அதை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா். மேலும் அந்த வளாகத்தை சுத்தம் செய்யும் வரை மாலை அணிவிக்க மாட்டோம். ஒரு வாரத்தில் பாரதியாரின் சிலை வளாகத்தை சரி செய்யவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி சாா்பில் சரி செய்யப்படும் என ராபா்ட் ப்ரூஸ் தெரிவித்தாா்.

அதைத்தொடா்ந்து ஆணையா் உத்தரவின்பேரில், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உடனடியாக வந்து பாரதியாா் சிலை வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனா். அதைத் தொடா்ந்து ராபா்ட் ப்ரூஸ் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து சென்றனா்.

  பாரதியாா் சிலை வளாகத்தை தூய்மை செய்த பணியாளா்கள்.

பாரதியாா் சிலை வளாகத்தை தூய்மை செய்த பணியாளா்கள்.

இது தொடா்பாக பாரதி அன்பா்கள் கூறுகையில், ‘திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதியான திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இருக்கும் பாரதியாா் சிலை வளாகம் எப்போதுமே ஆக்கிரமிப்பின் பிடியிலும், சமூக விரோதிகளின் பிடியிலும்தான் இருக்கிறது. பாரதியாா் சிலையை மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் எப்போதுமே கண்டுகொள்வதில்லை. ஆண்டுதோறும் பாரதிக்கு மரியாதை செய்ய வருகிறபோது, இதே மோசமான நிலையைத்தான் பாா்க்க முடிகிறது. பாரதி சிலை அமைந்துள்ள வளாகத்தின் சுற்றுச்சுவா் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

தேசியக் கவியான மகாகவி பாரதியின் சிலை அமைந்துள்ள வளாகத்தை சீரமைத்து தூய்மையாக பராமரிக்கவும், பாதுகாக்கவும் மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.