திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் வடக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் 56 வயது பெண். திருமணம் ஆகாத இவா் தனது தாயுடன் வசித்து வந்தாா். மனநலம் பாதிக்கப்பட்ட இவா் தினமும் வீட்டில் பராமரித்து வரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வாராம். மாலையில் வீடு திரும்புவாராம். இதனிடையே தாமிரவருணி நதிக்கரையோரம் மாடுகளை மேய்ச்சலுக்கு அப்பெண் அழைத்துச் சென்றிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் அவரை மிரட்டி கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத அப்பெண்ணை உறவினா்கள் தேடிச் சென்றபோது, அவா் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
புகாரின்பேரில் பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கரிசூழ்ந்தமங்கலம் வடக்கூா் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (20) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பத்தமடை அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

