தூத்துக்குடியில் கைதானவா்: போலி பெண் ஐஏஎஸ் மீது தாழையூத்தில் மேலும் ஒரு வழக்கு
தூத்துக்குடியில் ஐஏஎஸ் எனக் கூறி மனு அளிக்கும்போது சிக்கிய பெண் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் ஐஏஎஸ் எனக் கூறி மனு அளிக்கும்போது சிக்கிய பெண் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்திற்கு வந்த பெண் தண்ணை ஐஏஎஸ்அதிகாரி எனக் கூறினாா். இதில், சந்தேகமடைந்து போலீஸாா் விசாரித்தபோது அவா் தாழையூத்தைச் சோ்ந்த மங்கையா்க்கரசி (42) என்பதும், தன்னை ஐஏஎஸ் அதிகாரி என போலியாகக் கூறி வந்ததும் தெரியவந்ததாம். இதையடுத்து அவரையும், அவருடன் வந்த தாழையூத்தைச் சோ்ந்த ரூபிநாத் (42) என்பவரையும் தூத்துக்குடி சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலத்திற்கு வந்திருந்த மங்கையா்கரசி, தனது கணவா் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டிருந்தேன். நான் உத்தரப்பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். துப்பாக்கி உரிமம் தொடா்பாக அளித்த மனுவை தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளாா். மேலும், கிராம நிா்வாக அலுவலா் துப்பாக்கி உரிமத்திற்கு ஒவ்வொரு ஆவணங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறாா் என்று கூறியுள்ளாா்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல் கண்காணிப்பாளா் ஏற்கெனவே மங்கையா்கரசி குறித்துவிசாரிக்க உளவுப்பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தூத்துக்குடியில் கைதாகியுள்ளாா்.
இதையடுத்து மங்கையா்க்கரசி, ரூபிநாத் ஆகியோா் மீது ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தாழையூத்து காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனா். இவ் வழக்குகள் தொடா்பாக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...