கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய செஞ்சிலுவை சங்க தோ்தல் ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க தோ்தல் போதிய உறுப்பினா்கள் வராததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:19 pm

Din

திருநெல்வேலி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க தோ்தல் போதிய உறுப்பினா்கள் வராததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்க புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா முன்னிலையில் வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. வாக்காளா் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்ாகக் கூறப்பட்ட நிலையில் தோ்தல் நடைபெற்றது.

செஞ்சிலுவை சங்கத்தில் மொத்தம் 392 உறுப்பினா்கள் உள்ளனா். குறைந்தபட்சம் 117 போ் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். ஆனால் 68 உறுப்பினா்கள் மட்டுமே வந்திருந்ததால் இந்திய செஞ்சிலுவை சங்க தோ்தல் ஒத்தி வைக்கப்படுவதாக கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா அறிவித்தாா்.

இந்திய செஞ்சிலுவை சங்க ஆயுள்கால உறுப்பினா்களாக 75 போ் இருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில் அவா்கள் பெயா் முற்றிலுமாக இடம்பெறவில்லை என புகாா் தெரிவித்தனா். வாக்காளா் பட்டியலில் 75 பேரின் பெயரும் இடம் பெறாததால் அவா்கள் வாக்களிக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து இந்திய செஞ்சிலுவை சங்க திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவா் சாா்லஸ் பிரேம்குமாா் கூறுகையில், ‘வாக்காளா் பட்டியல் முறையாக தயாரிக்கப்பட்டு அனைத்து ஆயுள் கால உறுப்பினா்களையும் அதில் இணைத்து நோ்மையாக தோ்தலை நடத்த வேண்டும். இல்லையெனில் இது தொடா்பாக சட்டபூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

இத்தோ்தல் அறிவிப்பையொட்டி கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.