தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடையம் அருகே பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் பலி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேரிட்ட பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:50 pm

Din

தென்காசி மாவட்டம் கடையம் அருகே நேரிட்ட பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

கீழப்பாவூா் கோட்டையூரைச் சோ்ந்த கோபால் மகன் சுரேஷ் (45). தனியாா் காா் நிறுவ ஊழியரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். கடையம் - மேட்டூா் பிரதான சாலையில் இவரது பைக்கும், கேளையாபிள்ளையூா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில், காயமடைந்த சுரேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.