மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பைக் மீது காா் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

விபத்து

Updated On :13 மார்ச் 2026, 6:54 pm

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், எண்டியூா் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவா் க.ராஜசேகரன் (38). இவா் தீவனூா் பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை இரவு பணி முடிந்த பின்னா், ஊருக்கு பைக்கில் சென்றுள்ளாா்.

திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் எடையான்குளம் பகுதியில் ராஜசேகரன் வந்த போது, எதிரில் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், காரை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ரா.கலைச்செல்வன் (37) மீது கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.