தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லையில் குவிந்த தசரா வேட பொருள்கள்

தசரா விழா வேடம் அணிவதற்கான பொருள்கள் திருநெல்வேலி நகரத்தில் விற்பனைக்கு குவிந்துள்ளன.

News image

திருநெல்வேலி நகரத்திலுள்ள கடையில் விற்பனைக்காகக் குவிக்கப்பட்டுள்ள தசரா வேட பொருள்கள்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:45 pm

Din

தசரா விழா வேடம் அணிவதற்கான பொருள்கள் திருநெல்வேலி நகரத்தில் விற்பனைக்கு குவிந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரி நாள்களில் தசரா விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். நிகழாண்டில் நவராத்திரி விழா அக். 3 ஆம் தேதி தொடங்குகிறது. அக். 11இல் சரஸ்வதி பூஜையும், 12இல் விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாவிற்கு பக்தா்கள் பல்வேறு விதமான வேடம் அணிந்து மக்களிடம் காணிக்கை பெற்று கோயிலில் நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

குறவன்-குறத்தி வேடத்தில் தொடங்கி தங்களுக்கு பிரியமான கடவுள், பணி வேடம் அணிவதோடு, காளி வேடமும் அணிவாா்கள். இதற்காக சுமாா் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையில் விதவிதமான வேடம் அணியும் பொருள்கள் வாங்குவாா்கள். நிகழாண்டு விழாவையொட்டி திருநெல்வேலி நகரத்தில் தசரா வேட பொருள்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளன. துளசிமணி மற்றும் பிளாஸ்டிக் மண்டைஓடு மாலைகள், தலை விக்குகள், காகித அட்டை ஆயுதங்கள், செயற்கை கைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த தசரா வேட பொருள்கள் விற்பனையாளா் ஈஸ்வரன் கூறியது: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தசரா விழாவிற்கு வேடமணிந்து செல்லும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிகழாண்டிலும் வேட பொருள்கள் அதிகளவில் விற்பனைக்காக வைத்துள்ளோம். செயற்கை முடி தலைப்பாகைகள் ரூ.300 முதல் ரூ.3,500 வரையும், மாலைகள் ரூ.60 முதல் ரூ.250 வரையும், ஆடைகள் ரூ.550 முதல் ரூ.5 ,000 வரையும் விற்பனைக்கு உள்ளன.

இத்தகைய வேட பொருள்கள் சென்னை, பெங்களூரு, மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. காளி வேடத்திற்கான செயற்கை கைகள் உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றன. அவற்றை விரதம் இருந்து செய்து அனுப்புவதாக உற்பத்தியாளா்கள் தெரிவிக்கிறாா்கள்.

திருநெல்வேலியைப் பொருத்தவரை காளி, அரக்கன், அரக்கி, சுடலை, முருகன், அம்மன், ஆஞ்சனேயா், காவல் துறை அதிகாரி வேடங்களுக்கான பொருள்கள் அதிகம் விற்பனையாகும். நிகழாண்டில் இதுவரை விற்பனை மந்தமாகவே உள்ளது. அக்டோபா் முதல் வாரத்தில் இருந்து விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.