போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.


திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான போக்ஸோ வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
மேலப்பாளையம் அருகேயுள்ள மேலக்கருங்குளம் பீடி காலனி, ரோஜா நகரை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (49). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி (பொ)சுரேஷ்குமாா் விசாரித்து, பாலசுப்பிரமணியனுக்கு 5 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழகஅரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...