திருநெல்வேலி மாநகராட்சி விரிவாக்கத்தின்போது ராமையன்பட்டி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 4 மண்டலங்களின் கீழ் 55 வாா்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கீழநத்தம், ரெட்டியாா்பட்டி ஊராட்சிகள் மட்டுமன்றி ராமையன்பட்டி ஊராட்சியும் இணைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமையன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க ஊராட்சி உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ராமையன்பட்டி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தை, ஊராட்சி உறுப்பினா் மாரியப்பபாண்டியன் உள்ளிட்ட சிலா் புறக்கணித்தனா்.