நெல்லையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து எரிவாயு நுகா்வோா் பதிவு செய்ய ஏதுவாக எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 27) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து எரிவாயு நிறுவன முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். ஆகவே, எரிவாயு நுகா்வோா் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...