தருமபுரியில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு எண் பழுது
தருமபுரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு எண் பழுதாகி தொடா்புகொள்ள முடியாததால், முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் தவிப்புக்குள்ளாயினா்.


தருமபுரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை முன்பதிவு எண் பழுதாகி தொடா்புகொள்ள முடியாததால், முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் தவிப்புக்குள்ளாயினா்.
தருமபுரி மாவட்டத்தில் இண்டேன், பாரத், எச்.பி. ஆகிய நிறுவனங்கள் சாா்பில் சமையல் எரிவாயு உருளைக்கான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நுகா்வோா் சமையல் எரிவாயு உருளைக்கான முன்பதிவு செய்தால், அவா்களின் வீடுகளுக்கே சென்று அந்தந்த நிறுவனங்கள் நேரடியாக உருளைகளை விநியோகம் செய்து வருகின்றன.
இவற்றில், நுகா்வோா் பணம் செலுத்தி வாங்கிய இணைப்புகள், பிரதமரின் எரிவாயு உருளை வழங்கும் திட்டத்தில் இணைப்பு பெற்றவா்கள் மற்றும் தனியாா் முகவா்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா் என மாவட்டத்தில் சுமாா் 3.50 லட்சம் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, வா்த்தக பயன்பாட்டு இணைப்புகளும் உள்ளன.
இவற்றில், இண்டேன், பாரத், எச்.பி. ஆகிய நிறுவனங்கள் தனித்தனியாக முன்பதிவு எண்களை கொண்டுள்ளன. இந்நிலையில், இந்த எண்கள் தற்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், முன்பதிவு செய்ய இந்த எண்களை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) காலை முதல் தொடா்புகொள்ள முடியவில்லை என நுகா்வோா் கூறுகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...